நில மோசடி - ஏற்பட்ட சிக்கல்!!
கொழும்பு 7 பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றை விலைக்கு கொள்வனவு செய்ததுடன், அங்கு தொடர்மாடித் குடியிருப்பு தொகுதி ஒன்றை நிர்மாணித்தது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் கீழ் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டு குறித்த காணியில் தொடர்மாடி குடியிருப்புத் தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளுக்கமைய, 2 பேர் அந்தக் காணியைக் கொள்வனவு செய்வதற்காக வங்கியொன்றிலிருந்து 154 மில்லியன் ரூபா கடன் பெற்றுள்ளனர்.
அத்துடன், அத்தகைய கொள்வனவு ஒன்றை மேற்கொள்வதற்கான போதிய நிதி வசதி அவர்களிடம் இருக்கவில்லை என்பது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த கடன் தொகையை மீளச் செலுத்த முடியாமல் போனதன் காரணமாக வங்கியினால் காணி ஏலமிடப்பட்டுள்ளது.
பின்னர் அரசியல் தொடர்புகளைக் கொண்ட நபரொருவரால் உருவாக்கப்பட்ட நிறுவனம் ஒன்றின் ஊடாக குறித்த காணி விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் குறித்த காணி வேறொரு நிறுவனத்திற்கு 940 மில்லியன் ரூபாவிற்கு விற்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்மாடித் குடியிருப்புத் தொகுதி ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த தொடர்மாடித் குடியிருப்புத் தொகுதியில் வசிப்பவர்களின் பட்டியலொன்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பெறப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை