விமானத்தில் பிரசவம்!!
குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணித்த அல் ஜசீரா விமானத்தினுள் பெண் பயணி ஒருவர், குழந்தையை பிரசவித்துள்ளார்.
குறித்த விமானத்தின் பயணித்த வீட்டு பணிப்பெண் ஒருவர் இன்று அதிகாலை குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
இவர் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் குவைத்திற்குப் வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றிருந்தார். குறித்த பெண் திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 02.52 மணிக்கு குவைத் சிட்டி விமான நிலையத்திலிருந்து அல் ஜசீரா விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணித்துள்ளார்
பிரசவக் காலம் நெருங்கிய பெண்களை விமானப் பயணங்களுக்கு அனுமதிப்பதில்லை. எனினும் குறித்த பெண் தான் கர்ப்பமாக இருப்பதை விமானச் சேவை அதிகாரிகளிடம் மறைத்து விமானத்தில் பயணித்துள்ளார்.
இதன்போது தனது வயிற்றின் பருமனைக் காட்டாதவாறு உடலோடு ஒட்டிய டெனிம் ரகக் காற்சட்டையை அவர் அணிந்திருந்துள்ளார்.
இந்த நிலையில், விமானப் பணிப்பெண்களின் உதவியுடன் எவ்வித அசௌகரியமுமின்றி விமானத்தினுள்ளேயே இந்த மகப்பேறு இடம்பெற்றது.

.jpeg
)





கருத்துகள் இல்லை