பிக்குகளின் தொடர் போராட்டம்!!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கி அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, பௌத்த பிக்குகள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 5 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்று வரும் இந்தப் போராட்டத்தில் பிக்குகள் பிரித் பாராயணம் ஓதியவாறு போதி பூஜை உள்ளிட்ட பல்வேறு விசேட மத வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளுக்குப் பொதுமக்கள் வருகை தந்து தானங்களை வழங்கியும், தமது ஆதரவைத் தெரிவித்தும் வருகின்றனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை