உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் அறிவிப்பு!!

 




2025-2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசித் திகதி 2026 நவம்பர் 30 என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நினைவூட்டியுள்ளது.

வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து வரி செலுத்துவோரும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தமது அறிக்கைகளைத் தவறாது சமர்ப்பிக்குமாறு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக்கொண்டுள்ளது.

வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது தொடர்பான மேலதிக விபரங்கள் அல்லது தெளிவுபடுத்தல்களுக்குத் திணைக்களத்தின் 1944 என்ற அவசர உதவி இலக்கத்தைத் தொடர்புகொள்ளலாம்.

அத்துடன், மேலதிகத் தகவல்களைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.ird.gov.lk இல் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.