இலங்கை அணியின் வெற்றி!!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்கள் கிரிக்கெட்டில் மூன்றாம் இடத்துக்கான போட்டியில், பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
தரிந்து ரத்நாயக்கவின் அதிரடி அரைச்சதத்தின் உதவியுடன், இலங்கை அணி பங்களாதேஷை 63 ஓட்டங்களால் வீழ்த்தி,வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
கொரோகி விளையாட்டு பூங்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 11ஆவது ஓவரில் 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும், தரிந்து ரத்நாயக்க மற்றும் சஹான் ஆரச்சிகே ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.
தரிந்து ரத்நாயக்க வெறும் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 65 ஓட்டங்களை குவித்தார். அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய சஹான் ஆரச்சிகே 93 ஓட்டங்களைப் பெற்ற இணைப்பாட்டத்தில் முக்கிய பங்காற்றினார்
மஹதி ஹசன் மற்றும் அலிஸ் அல் இஸ்லாம் ஆகியோரின் பந்துவீச்சில் இலங்கை அணி நான்காவது ஓவரில் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் அஷேன் பண்டார மற்றும் சஹான் ஆரச்சிகே இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை ஓரளவு உயர்த்தினர்.
எனினும், ரிஷாத் ஹொசைன் அஷேன் பண்டாரவை ஆட்டமிழக்கச் செய்ததையடுத்து, 11ஆவது ஓவரில் இலங்கை 54/5 என மீண்டும் நெருக்கடிக்குள்ளானது. இதன்போது களமிறங்கிய தரிந்து ரத்நாயக்க அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சஹான் ஆரச்சிகேவுடன் இணைந்து வெறும் 44 பந்துகளில் 93 ஓட்டங்களைப் பெற்றார். முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய ஓவரில் 25 ஓட்டங்களையும், ரிஷாத் ஹொசைன் வீசிய ஓவரில் 16 ஓட்டங்களையும் இலங்கை வீரர்கள் குவித்தனர்.
இறுதி 5 ஓவர்களில் மட்டும் 61 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணி 165/9 என்ற சவாலான இலக்கை பங்களாதேஷுக்கு நிர்ணயித்தது.
.

.jpeg
)





கருத்துகள் இல்லை