தடம்புரண்டது தொடரூந்து!!
பேராதனையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி தொடருந்து ஒன்று இன்று காலை தடம் புரண்டுள்ளது.
இன்று(05.10.2026) அதிகாலை 4.40 மணியளவில் கங்கொட மற்றும் கடிகமுவ தொடருந்து நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடருந்து பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தமை காரணமாகவே தொடருந்து தடம் புரண்டுள்ளதாக தொடருந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த மார்க்கத்தில் பயணிக்கும் அனைத்து தொடருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை