2026 ம் ஆண்டுக்கான புகைப்பட வெற்றியாளர்கள்!!




 2026ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


இதுவரை இல்லாத அளவுக்கு 121 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து  65,403 புகைப்படங்கள் பெறப்பட்டு அதிலிருந்து இருந்து வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இயற்கையின் படைப்பில் நிகழும் வலிமையான கதைகளையும், இயற்கையை பாதுகாக்க வேண்டிய அவசர தேவையையும் இந்த ஆண்டு வெற்றி பெற்ற புகைப்படங்கள் எடுத்துக்காட்டுகின்றன.


நமீபியாவின் ஹுவாப் நதிப் பள்ளத்தாக்கில் இறந்த குட்டியைச் சுமந்து செல்லும் பெண் யானையைப் படம்பிடித்த ‘The Aftermath’ என்ற புகைப்படத்துக்காக, இத்தாலிய புகைப்படக் கலைஞர் ஃபெடெரிகோ வெரோனேசி 2026ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞராக அறிவிக்கப்பட்டார்.  


ஜிம்பாப்வேயில் சாண வண்டு ஒன்று தனது மதிப்புமிக்க சுமையை உருட்டிச் செல்வதை காட்டும் ‘Labour of Love’ புகைப்படத்துக்காக, பிரிட்டன் புகைப்படக் கலைஞர் ஆஸ்கர் விட்ஃபீல்டு 2026ஆம் ஆண்டின் சிறந்த இளம் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றார்.


#WildlifePhotographerOfTheYear #Wildlife #Photography

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.