கடத்தப்பட்டது பேருந்து!!

 



கொழும்பில் கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


வவுனியா செல்வதற்காக பெஸ்டியன் மாவத்தையில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த குறித்த பேருந்து திருடப்பட்ட நிலையில், பேலியகொட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

வவுனியாவிலிருந்து நொச்சியாகம நோக்கி இயக்கப்படும் குறித்த பேருந்து, வவுனியாவுக்கு மீண்டும் இயக்கப்படுவதற்காக நேற்று முன்தினம் அதிகாலை கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

அதிகாலை நேரத்தில் பேருந்திற்கு வந்த ஓட்டுநர், அதனை காணாத நிலையில் அதிர்ச்சி அடைந்து, கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

பேலியகொட பகுதியில் உள்ள வீதியொன்றில் குறித்த பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக மற்றுமொரு பேருந்து ஓட்டுநர் தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற பொலிஸார், எரிபொருள் தீர்ந்த நிலையில் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.