பிரான்சில் விபத்தில் தமிழ் மாணவி உயிரிழப்பு.!


பிரான்ஸின் Seine-Saint-Denis மாவட்டம், Aulnay-sous-Bois நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயதுடைய தமிழ் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கடந்த நவம்பர் 23ஆம் திகதி, தோழியுடன் மின்சார ஸ்கூட்டரில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, பாரவுந்து மோதியதில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


வவுனியா, ஆறுமுகத்தான் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தவராசன் பிரீத்தி என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.


அவருடன் பயணித்த மற்றைய மாணவி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உயிராபத்து இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


விபத்தை ஏற்படுத்திய பாரவுந்தின் சாரதி பொலிஸாரின் விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.


''பாதுக்காப்பாகவும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைத்துக்கொள்ள முடியும்''


#France #AulnaySousBois #Vavuniya #TamilStudent #RoadAccident #TragicNews #TamilDiaspora #RIP #Heartbreaking #BreakingNews #TamilNews #SriLankaNews #awareness

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.