பொலிசாரின் முக்கிய அறிவிப்பு!!
நிதி மோசடி தொடர்பான விசாரணையில் தேடப்பட்டு வரும் 58 வயதுடைய சந்தேகநபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு கோரியுள்ளது.
மாத்தறை மாவட்ட கூட்டுறவு வங்கி ஒன்றியம் மற்றும் மாத்தறை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம் தொடர்பான நிதி மோசடி விசாரணையில் குறித்த நபர் தேடப்பட்டு வருகிறார்.
சந்தேகநபரைக் கைது செய்வதற்காக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், அவர் அந்தப் பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071-8594910 அல்லது 011-2444172 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை