எரிவாயு விலை அதிகரிப்பு¡

 



லாஃப்ஸ் எரிவாயு விலையை அதிகரித்தமைக்கான காரணத்தை அந்த நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நளிந்த குருகுலசூரிய வெளியிட்டுள்ளார்.


அதன்படி, உலகச் சந்தையில் எரிவாயு விலை, கப்பல் கட்டணம், காப்புறுதிக் கட்டணம் மற்றும் நாணய மாற்று விகிதங்கள் அதிகரித்தமையினால் ஏற்பட்டுள்ள செலவினங்களை ஈடுசெய்வதற்காகவே விலை அதிகரிப்பை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விலை திருத்தத்தின் மூலம் நிறுவனம் மேலதிக இலாபத்தை எதிர்பார்க்கவில்லை எனவும், நிறுவனத்தின் செலவினங்களை ஈடுசெய்வதற்காகக் கணக்கிடப்பட்ட விலை மட்டுமே இதுவெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையைத் தீர்மானிப்பதில் பல முக்கிய காரணிகள் செல்வாக்குச் செலுத்துவதாகச் சுட்டிக்காட்டிய அவர், சவூதி அராம்கோ (Saudi Aramco) நிறுவனத்தினால் ஒவ்வொரு மாதமும் ஆரம்பத்தில் வெளியிடப்படும் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை அவற்றில் பிரதான காரணியாக அமைவதாகக் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.