யாழில் மாணவர் போக்குவரத்து சேவை சீரமைப்பு!!

 



யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் வாகனங்களை முறையான பதிவுக்கு உட்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட சேவையாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


யாழ். மாவட்ட பாடசாலை வாகனச் சங்கத் தலைவர் கோகுலம் தலைமையில், சுண்டுக்குழியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது.

இதில் யாழ்ப்பாணப் போக்குவரத்துப் பிரிவின் இரண்டாம் நிலை அதிகாரியும் கலந்து கொண்டார்.

1999ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வரும் பல தனியார் வாகனங்கள் இதுவரை முறையான பதிவுக்கு உட்படாமல் சேவையாற்றி வந்துள்ளன.

அதேவேளை, மாவட்டத்தில் இயங்கி வந்த சங்கமும் பதிவு செய்யப்படாத நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில், சேவையை முறைப்படுத்தும் நோக்கில் அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள தாய்ச் சங்கத்தின் பிரதிநிதிகளால் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவைக்கான நடைமுறைகள், விதிமுறைகள் மற்றும் பதிவு தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.