தேரரின் வாக்குமூலம்!!




 தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் மனைவி தன்னை தொடர்பு கொண்டு நலன் விசாரித்ததாக ராஜாங்கனை சத்தாரத்ன தேரர் தெரிவித்தார்.



அனுராதபுரத்தில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, பொல்லால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து தாம் உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார். 

நேற்று (14) தனது யூடியூப் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில், தான் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது நாட்டின் முதற்பெண்மணி எதிர்பாராத விதமாகத் தன்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்ததாகக் தெரிவித்தார்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.