புதிய நோயாளர் காவு வண்டிகள்!!
இலங்கை அரசாங்கத்தின் 1990 சுவசெரிய தேசிய அவசர நோயாளர் காவு சேவைக்கு மேலும் 100 வண்டிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை இடையே கைச்சாத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று(11.11.2026) நடைபெற்ற முதலாவது BIMSTEC சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோதே இந்த ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் 1,725.73 மில்லியன் இலங்கை ரூபா நிதி நன்கொடை உதவியின் கீழ் இந்த நோயாளர் காவு வண்டிகள் வழங்கப்படவுள்ளன.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜயசிங்க ஆகியோர் கைச்சாத்திட்டு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
இதன் மூலம் அவசர மருத்துவ உதவிகளை வழங்கும் செயற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்படுவதுடன், அவசர அழைப்புக் கிடைத்ததிலிருந்து 10 நிமிடங்களுக்குள் நோயாளர்களைச் சென்றடையும் வகையில் சேவையின் பதிலளிப்பு நேரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும், இத்துறையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு வசதிகளை மேம்படுத்துதல், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் மருத்துவ விடுதித் தொகுதியை நிர்மாணித்தல் மற்றும் தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்குதல் ஆகியன இடம்பெறுகின்றன.

.jpeg
)





கருத்துகள் இல்லை