பொதுமக்களுக்கான எச்சரிக்கை!!
எதிர்வரும் நத்தார் பண்டிகைக்கான பொருட்கொள்வனவில் ஈடுபடும் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொருட்கொள்வனில் ஈடுபடும் பொழுது, மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் உங்களுடைய பணப் பைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்
மேலும், சிறு பிள்ளைகளை எப்போதும் உங்கள் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி அட்டைகள் மூலம் கொடுப்பனவுகளைச் செலுத்தும் போதும், ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தும் போதும் உங்கள் இரகசிய இலக்கத்தை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் பொலிஸார் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை