கால்நடை பண்ணையாளர்களுக்கு எச்சரிக்கை!!
மட்டக்களப்பு - பட்டிப்பளை கெவுளிமடு பகுதியில் மேய்ச்சல்தரை பகுதியில் தமது கால்நடைகளைப் பராமரித்து வரும் பண்ணையாளர்கள் மீது அண்மைக்காலமாக காடுகளுக்குள் கால்நடைகளை விடுவித்ததாகத் தெரிவித்து வன வளத்துறையினர் வழக்குகளைப பதிவு செய்து அச்சுறுத்தி வருவதாக அப்பகுதியில் கால்நடைகளை வளர்த்து வரும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுபோல் வியாழக்கிழமையும்(19.11.2026) பண்ணையாளர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை(20.11.2026) மீண்டும் அப்பகுதிக்குச் சென்ற வன வளத்துறையினர் மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலராலும் அப்பகுதியில் மாடுகள் அடைக்கப்பட்டிருந்த தொழுவத்தையும் உடைத்து சேதப்படுத்தி, அவற்றை உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் அச்சமடைந்த பண்ணையாளர்கள் உயிர் பிழைப்பதற்காக காடுகளுக்குள் ஓடி ஒழிந்துள்ளனர்.
இந்நிலையில் பண்ணையாளர்கள் அப்பகுதியில் தங்கியிருப்பதற்காக அமைத்திருந்த சிறிய கொட்டகையையும் உடைப்பதற்கு வன வளத்துறையினர் முற்பட்டபோது அக்கிருந்த சிங்கள் நபர் ஒருபர் அதனை உடைக்க வேண்டாம் அது என்னுடையது என தெரிவித்ததற்கு இணங்க அதனை விட்டு விட்டு மாடுகளை அடைத்திருந்த அனைத்து தடிகளையும், உடைத்து ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர்
இப்பகுதி வனப்பகுதியாகும். இங்கு மாடுகளை மேய்க்க முடியாது. இரண்டு நாட்களுக்குள் இங்கிருந்து அனைத்து கால்நடைகளையும் எடுத்துக் கொண்டு வெளியேறச் சொல்லவும் என இங்கிருந்து ஓடி ஒழிந்த குறித்த அந்த நபருக்கு எதிராக மீண்டும் வழக்குப் பதிவு செய்வோம் என அங்கிருந்த சிங்கள நபரிடம் வன வளத்துறையினர் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
தற்போது மாரி மழை காலம் பெரும்போக வேளாண்மைச் செய்கை ஆரம்பித்துள்ள காலம் ஆகையால் நாம் வருடாந்தம் இப்பகுதியில்தான் எமது கால்நடைகளை மேய்ப்பது வழக்கம்.
நாம் காடுகளுக்குள் எமது கால்நடைகளை விடவும் இல்லை, விடுவதும் இல்லை, அப்பகுதியில் பெரும்போக வேளாண்மைச் செய்கை பண்ணப்படாமல் நிலப்பகுதி உள்ளது.
அவற்றில்தான் எமது கால்நடைகளை மேய்த்து வருகின்றோம் என தற்போது உயிருக்குப் பயந்து காட்டில் தஞ்சம் புகுந்துள்ள பண்ணையாளர் ஒருவர் ஊடகங்களைத் தொடர்பு கொண்டு தமது நிலமையத் தெரிவித்தார்.
எனவே தாம் காட்டுக்குள் இருந்து வெளியேறிய பின்னர் வன வளத்துறையினரால் துரத்தி விடப்பட்ட கால்நடைகளை எங்கு தேடிப்பிடிப்பது எனத் தெரியாதுள்ளது.
தம்மை தாக்குவர்கள் என்ற அச்சத்தில் நாம் காட்டுக்குள் இருக்கின்றோம். எனவே தமது பாதுகாப்பை உறுதிப்படுததவும், தாம் அச்சமின்றி அப்பகுதியில் கால்நடைகளை வளர்ப்பதற்குரிய சூழலை உருவாக்கித் தருமாறு சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பிரனிடம் மிகவும் உருக்கமாக வேண்டுகோள் விடுப்பதாக கெவுளியாமடு பகுதியில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை