முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வழமை போன்று வடக்கு மாகாண சபையே நடத்தும்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வழமை போன்று வடக்கு மாகாண சபையே இம்முறையும் நடத்ததும். அதில் பல்வேறு பொது அமைப்புக்களும் பங்கேற்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான சிறப்புக் கலந்துரையாடல் வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் நினைவேந்தல் தொடர்பில் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இதற்கென குழுவும் நியமிக்கப்பட்டது.
“ எமது இனத்துக்கு ஏற்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் நிகழ்வை எம்முடன் இணைந்து முன்னெடுக்க பொது அமைப்புக்கள் பல முன்வந்துள்ளன. நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்குபடுத்த மாகாண சபை உறுப்பினர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு எதிர்வரும் 9 ஆம் திகதி கூடும். அதில் முடிவு எடுக்கப்படும் ” என்று கூட்டத்தின் பின்னர் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.