புத்தளத்தில் மக்கள் போராட்டம்!

புத்தளம் பகுதியில் சீன நிறுவனமொன்றினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று முன்னெடுத்தனர்.குறித்த ஆர்ப்பாட்டத்தை புத்தளம், முந்தல் நகரில் மக்கள் முன்னெடுத்திருந்தனர்


புத்தளம்- நுரைச்சோலை லக் விஜய அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளைக் கொண்டு முந்தல் 412 ஏக்கர் பகுதியில் சீன நிறுவனமொன்று சீமேந்து கல் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்து வருவதனை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி, புத்தளம்-கொழும்பு பிரதான வீதியிலிருந்து முந்தல் நகரிலுள்ள பௌத்த விஹாரைக்கு பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது முந்தல் பிரதேச செயலாளர், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்கள மற்றும் முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் புத்தளம் பிரதேச சபையின் ஊடாக சம்பந்தப்பட்ட சீன நிறுவனம் அமைக்கும் சீமெந்து உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியுடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.