ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு?

ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் வரலாற்றில் இதற்கு முன்னர் பிக்குமாருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சட்டத்தின்படி வழங்கப்படும் தீர்ப்புகள் தொடர்பாக எதனையும் கூற முடியாது. சிறையில் ஏற்கனவே 15 பிக்குகள், மூன்று இந்து மத குருமார் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.அவர்களில் பாரதூரமான குற்றங்களை செய்த பிக்குமாரும் அடங்குகின்றனர்.

இந்த நிலையில், ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை சிலர் அரசியலமயப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால், சிறையில் இருக்கும் ஏனைய பிக்குமாறும் பொதுமன்னிப்பை வழங்குமாறு கோரும் சூழல் உருவாகும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.