பிசிசிஐ: விலகும் பிரபலங்கள்!

பிசிசிஐயில் ஆலோசகர்களாக இருந்துவரும் சச்சின், கங்குலி மற்றும் வி.வி.எஸ் லட்சுமண் ஆகியோர் விரைவில் பதவி விலகவுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரர்களாக இருந்துவந்த சச்சின், கங்குலி மற்றும் வி.வி.எஸ் லட்சுமண் ஆகியோர் பிசிசிஐ ஆலோசனைக் குழுவில் உள்ளனர். தங்களது தேர்ந்த அனுபவத்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு அவர்களது ஆலோசனைகள் உதவிகரமாக இருக்கும் என்னும் நோக்கத்தில் இந்தப்பதவிகளை அவர்கள் வகித்துவந்தனர்.

இந்நிலையில் பிசிசிஐயின் சில விதிகளின்படி அவர்கள் அந்தப்பணிகளைத் தொடரமுடியாத சூழல் தற்போது உருவாகியுள்ளது. அதாவது, கங்குலி பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ளார், மேலும் கிரிக்கெட் கமென்ட்ரியும் செய்து வருகிறார். விவிஎஸ் லட்சுமண் மீடியா வேலைகளிலும், ஐபில் போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஆலோசகராகவும் உள்ளார். எனவே இவர்கள் இருவருக்கும் நிறைய பொறுப்புகள் இருப்பதால் ஆலோசனைக் குழுவில் நிரந்தரமாக ஈடுபட முடியாது எனக் கூறி நீக்கப்படவுள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆலோசகராக உள்ளார். மேலும் அவரது மகன் அர்ஜுன் இந்தியா ‘அண்டர்-19’ அணியில் இடம்பெற்றுள்ளார். நெருங்கிய சொந்தங்கள் யாரேனும் அணியில் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் ஆலோசனைக் குழுவில் இருந்து வெளியேற வேண்டும். அதன்படி சச்சினும் இந்தக்குழுவில் இருந்து நீக்கப்படவுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.