உயிருடன் பிடிபட்ட 100 கிலோ கடல் அட்டைகள்..!

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் இருந்து அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் அட்டைகளை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. நேற்று காலை மண்டபம் அருகே உள்ள பகுதியில் கடத்துவதற்காக படகில் தயாராக இருந்த 100 கிலோ கடல் அட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
Powered by Blogger.