சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட 23 பேர் கடற்படையால் கைது!

கடந்த சில தினங்களுள் இலங்கைக் கடற்பரப்பில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட 23 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

 கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்டமை, சட்டவிரோத கடற்தொழில் மற்றும் அனுமதியின்றி முத்துக்குளியலில் ஈடுபட்டமை போன்ற குற்றங்களுக்காக அவர்கள் கைதாகி இருப்பதாக, கடற்படையின் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 கஞ்சா கலந்து உற்பத்தி செய்யப்படும் 10.35 கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 3 பேர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 புத்தளம் - தளுவ, களைப்பாடு, கீராமுனை மற்றும் பத்தளகுண்டு பிரதேசங்களில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது சட்டவிரோத கடற்தொழிலுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் சுமார் 2 ஆயிரம் கிலோகிராம் கடலுணவுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 இதேவேளை, மல்வத்துஒய தியபென்னும பகுதியில் 1.9 கிலோகிராம் கேரளகஞ்சாவை கடத்திச் சென்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Powered by Blogger.