2400 குளங்களை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

உலர் வலய பிரதேசத்தில் உள்ள 2400 குளங்களை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தில் 123 குளங்களை புனரமைப்பு செய்யும் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. 

ஹிங்குராங்கொட, சந்தனபொகுன குளத்தின் புனரமைப்பு பணிகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு கூறியுள்ளது. 

நீண்ட காலமாக புனரமைக்கப்படாத பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பழைய குளங்கள் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்படவுள்ளன. 

குளங்களை புனரமைப்பு செய்வதன் ஊடாக பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் எதிர்காலத்தில் தடையின்றி தங்கள் விவசாயத் தேவைகளுக்கான தண்ணீரை பெற முடியும் என ஜனாதிபதி கூறியுள்ளார். 

அதேவேளை முறையான திட்டமிடல் படி இந்த அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விளக்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு கூறியுள்ளது.
Powered by Blogger.