சிற்­றூ­ழி­யர்­களுக்கு வெற்­றி­டம் அதி­க­ரிப்பு!

யாழ். மாவட்­டச் செய­ல­கம் மற்­றும் பிர­தேச செய­ல­கங்­க­ளில் நீண்­ட­கா­லம் பணி­யாற்­றிய சிற்­றூ­ழி­யர்­கள் 20பேர் அலு­வ­லர்­க­ளாக பதவி உயர்­வு­டன் இட­மாற்­றம் பெற்­றுச் செல்­வ­த­னால் சிற்­றூ­ழி­யர்­க­ளுக்­கான வெற்­றி­டம் ஏற்­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
மாவட்­டச் செய­ல­கம் மற்­றும் பிர­தேச செய­ல­கங்­க­ளில் நீண்ட கால­மாக சிற்­றூ­ழி­யர்­க­ளாக பணி­யாற்­றி­ய­வர்­க­ளில் நிரந்­தர நிய­ம­னம் பெற்று 6 ஆண்­டு­க­ளின் பின்பு பதவி உயர்­வுப் பரீட்­சை­யில் தோற்­றி­ய­வர்­க­ளில் 20பேர் சித்தி எய்தி எழு­து­ந­ரா­கப் பதவி உயர்வு பெற்­றுச் செல்­கின்­ற­னர்.
இவர்­கள் 20பேரும் எதிர்­வ­ரும் 2 ஆம் திகதி தொடக்­கம் புதி­தாக நிய­மிக்­கப்­ப­டும் திணைக்­க­ளங்­க­ளில் தம­து ­ப­ணி­க­ளைப் பொறுப்­பேற்­க­வுள்­ள­னர்.
இதே­நே­ரம் பதவி உயர்வு பெற்­றுச் செல்­வ­த­னால் மாவட்­டச் செய­ல­கம் மற்­றும் பிர­தேச செய­ ல­கங்­க­ளில் சிற்­றூ­ழி­யர்­கள் வெற்­றி­டம் அதி­க­ரித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
Powered by Blogger.