வவுனியாவில் கையெழுத்து சேகரிப்பு!

ஐ.நா. நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்தக் கோரி வவுனியாவில் இன்று கையெழுத்து சேகரிக்கப்பட்டது.


இலங்கையில் இடம்பெற்ற மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்ட மீறல்கள் தொடர்பில், ஐ.நா மனித உரிமை பேரவை 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தில், ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாடுகளில் இருந்து இலங்கை அரசு விலகியுள்ளது.

இலங்கை அரசு தீர்மானத்தை உதாசீனம் செய்துள்ளது. 2017 மார்ச் இல் வழங்கப்பட்ட 2 வருட கால அவகாசத்தை முதல் அரைப்பகுதியில் நிறைவேற்ற இலங்கை அரசு எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் பன்னாட்டு குற்றவியல் தீர்மானத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை நிறைவேற்ற வேண்டும் என்பதை இலக்காக கொண்டு இந்தக் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன.
Powered by Blogger.