மைத்திரி இன்று பாகிஸ்தான் விஜயம்!

பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைனின் அழைப்பையேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானுக்கான 3 நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை இன்று (22) மேற்கொள்ளவுள்ளார். பாகிஸ்தானின் தேசிய தின வைபவத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தவுள்ளார். இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் இளைஞர் மேம்பாடு பண்டாரநாயக்கா சர்வதேச டிப்ளோமா பயிற்சி நிறுவனத்திற்கும் பாகிஸ்தான் வெளிநாட்டு சேவைகள் கல்வி நிறுவனத்திற்கும் இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கை நெறி நிறுவனத்திற்கும் இஸ்லாமபாத் மூலோபாய நிறுவனத்திற்கும் இலங்கை நிர்வாகத்துறை அபிவிருத்தி நிறுவனத்திற்கும் பாகிஸ்தான் தேசிய பாடசாலை பொது கொள்கை நிறுவனத்திற்கும் இடையில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன. ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது இஸ்லாமபாத்தில் மறுசீரமைக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகளின் தங்குமிட பௌத்த மத்திய நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார்.
Powered by Blogger.