அதர்வா நடிகையை தன்வசமாக்கிய விஷால்!

இரும்புத்திரை படத்தை அடுத்து, விஷால் அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்திற்காக அதர்வாவின் நடிகை இணைய இருக்கிறார். #Temper #Vishal
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரும்புத்திரை’. இதில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 
இப்படத்தை அடுத்து தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘டெம்பர்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் விஷால். இதில் இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்கவுள்ளார். விக்ரம் வேதா புகழ் சாம் சிஎஸ் இசையமைக்கிறார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் நடித்திருந்தனர். பூரி ஜெகன்நாத் இயக்கி இருந்தார். 2015ம் ஆண்டு இப்படம் வெளியானது.நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.