பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து வேட்டையிலேயே ஒன்றிணைந்த எதிர்கட்சியினரை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர்.
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவை எதிர்நோக்கியிருந்த நிலையில் பிரதமர் ரணிலை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. அதன் பின்னணியிலேயே ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
14 காரணங்களை உள்ளடக்கியதாக அந்த நம்பிக்கையில்லா பிரேரணை அமைந்துள்ளது. அதில் 12 காரணங்கள் மத்திய வங்கியின் பிணைமுறியுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.