மீன்பிடித்துறை அபிவிருத்திக்கு உதவி வழங்குமாறு கோரிக்கை!

மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு இலங்கையிடம் சீசேல்ஸ் கோரியுள்ளது.
இலங்கைக்கான சீசேல்ஸ் தூதுவர் கொண்ராட் மெடிறிக், மீன்பிடித்துறை அமைச்சர் திலிப் வெதஆராச்சியை அண்மையில் சந்தித்துள்ளார்.
சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடி என்பன தமது நாட்டுக்கு வருமானம் வரும் முக்கிய துறைகள் என்று குறிப்பிட்டுள்ள சீஷேல்ஸ் தூதுவர். மீன்பிடித்துறை அபிவிருத்திக்காக, குளிரூட்டல் தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை கோரியுள்ளார். இந்த நிலையில், குறித்த உதவிகளை சீஷேல்ஸுக்கு இலங்கை வழங்குதாக மீன்பிடித்துறை அமைச்சர் திலிப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.