கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை நிலை!

கிளிநொச்சி மாவட்டம் வறுமை நிலைக்குச்செல்வதற்கு வறட்சியே காரணமாக அமைந்திருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் கீழான சிறுபோக பயிர்ச்செய்கை கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசஅதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதில் கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர், ‘பயிரச்செய்கை தொடர்பாக எடுக்கப்படுகின்ற தீர்மானங்களையும் சட்டதிட்டங்களையும் எல்லோரும் சரியாகக் கடைப்பிடிக்கவேண்டும் இதற்கு முரணாக ஏதேனும் செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
காலநிலை பற்றி ஊகத்தில் எதனையும் சொல்ல முடியாது. குளத்தின் நீர்மட்டத்தையும் எதிர்கால செயற்பாடுகளையும் அடிப்படையாகக்கொண்டு தீரமானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் போசாக்கு மட்டத்தினை அதிகரிப்பதற்கும் உப உணவுத்தேவைகளை நிறைவு செய்வதற்கும் உப உணவுச்செய்கை முன்னுரிமைப்படுத்தப்பட்டு இதனை பயிரிட அதிகளவான விவசாயிகள் முன்வர வேண்டும்.
குறிப்பாக, நெற்செய்கை மட்டும் அல்லாது சிறுதானியச்செய்கை கால்நடை வளர்ப்பு வறட்சி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இப்பயிர்ச்செயகை தீர்மானிக்கப்பட்டு நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதி உச்சப் பயனை அடையவேண்டும்.
எமது மாவட்டம் வறுமை நிலலைக்குச் செல்வதற்கு செல்வதற்கு முக்கிய காரணம் இரணைமடுக்குளத்தில் தண்ணிர் இன்மையால் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் செய்கை பண்ணப்படாமல்போனது,
மற்றும் நன்னீர் மீன்பிடி பாதிப்பு, கூலித்தொழிலாளர் பாதிக்கப்பட்டிருப்பது, எனப்பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகின்றன.
எமது மாவட்டம் விவசாயத்தில் தங்கியுள்ளதனால் வறட்சி காரணமாக வறுமை நிலைக்குச்சென்றிருக்கின்றது’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.