காவலர்கள் ஏன் கோவப்படுகிறார்கள்-நடிகர் கார்த்திக் பரபரப்பு பேட்டி..!

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த பின்பு கார்த்திக் காவலர்களில் ஒருவனாகவே மாறிவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.அதில் அவர் ஒரு நேர்மையான காவலர் அதிகாரியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று ஓய்வு பெற்ற காவல்துறை அதிகரிகள் ஒன்றிணைந்து அறக்கட்டளை ஒன்றினை உருவாக்கினார்.அதில் கார்த்திக் மற்றும் அவரது தந்தை சிவகுமார் கலந்துகொண்டனர்.அப்போது அவர் பேசியது தான் நேர்மையான அதிகாரியகா நடித்ததே கடினமாக இருந்தது,இந்நிலையில் உண்மையான வாழ்க்கையில் நேர்மையாக இருப்பது இன்னும் அதிகமாக பாடுபட வேண்டும்.
காவல் துறை அதிகாரிகள் எப்போதும் மக்களுக்காகவே ஓய்வு கூட இன்றி  பணிசெய்கின்றனர்,இதனால் அதிகாகமாக பாதிக்கப்படுவது அவர்களது குடும்பமே.அவர்கள் குடும்பம் சந்தோஷமாக இருந்தால் தான் அவர்கள் நம்பிக்கையுடன் மக்களுக்கு பணி செய்ய முடியும்.காவலர்களுக்கு போதிய ஓய்வு கூட இல்லை,இத்தகைய காரணங்களால் ஏற்படும் அழுத்தத்தினால் தான் அவர்கள் மக்களிடம் கோவத்துடனும்,சிடு சிடுவென்றும் இருக்கின்றனர்.எனவே அவர்களுக்கு போதிய ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என கூறினார். 
 
Powered by Blogger.