வலி. மேற்கு பிரதேச தலைவராக த. நடனேந்திரன் தெரிவுசெய்பட்டார்!

யாழ் வலிகாமம் மேற்குப் பிரதேச சபையின் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தர்மலிங்கன் நடனேந்திரன் தெரிவு செய்யப்பட்டார்.
வலி. மேற்கு பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை தெரிவுசெய்யும் முதலாவது அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
25 ஆசனங்களைக்கொண்ட யாழ் காரைநகர் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 9 ஆசனங்களையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி 6 ஆசங்களையும் சிறிலங்கா அரச ஒட்டுக்குழு  ஈ.பி.டி.பி 4 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 3 சுயேட்சைக் குழு 2 ஆசனங்களையும் கொண்டிருந்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தர்மலிங்கம் நடனேந்திரனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தேவராஜா ரஜீவனும் தலைவர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டனர்.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பிரேரிக்கப்பட்ட தர்மலிங்கம் நடனேந்திரன் 18 வாக்குகளை பெற்று தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் பிரேரிக்கப்பட்ட உறுப்பினர் 6 வாக்குகளையும் பெற்றார்.
Powered by Blogger.