கண்டி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு சலுகை வட்டியில் கடன்!

கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட வியாபார சொத்துக்களுக்காக சலுகை வட்டி வீதத்தின் கீழ் கடன் வசதிகளை பெற்றுக் கொடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 2% சலுகை வட்டி வீதத்தின் கீழ் இந்த கடன் வசதிகளை பெற்றுக் கொடுக்கப்பட உள்ளது. பொது முயற்சியான்மை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தின் ஆரம்ப வாரத்தில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்குரிய சம்பவங்களால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த கடன் திட்டம் வழங்கப்பட உள்ளது. பாதிக்கப்பட்ட வியாபாரங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, நிபந்தனைகள் மற்றும் நியமங்களுக்கு உட்பட்டு இக்கடன் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.