துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் மூன்று மாதங்களுக்குள் 8 பேர் பலி!

இவ்வருடத்தின் இதுவரையிலான மூன்று மாதங்களுக்குள் இடம்பெற்ற பாதாள உலக குழுக்களுக்கிடையிலான மோதலினால், 8 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், அதுருகிரிய மற்றும் ஆமர் வீதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். அதேபோல், கிரேன்பாஸ்,பத்தரமுல்ல,தலங்காமம்,வத்தளை,பொரளை,கம்பஹா மற்றும் மிஜிராவில பகுதிகளிலும் இடம்பெற்ற ​துப்பாகிப் பிரயோகங்களிலும் ஏனையவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மாகந்துரை மதுசான் மற்றும் சமயன் என்கிற இரண்டு நபர்களுக்கு கீழ் இயங்கி வரும் இரு பாதாள கும்பலுக்கிடையிலான மோதல் காரணமாகவே இவ்வாறு நபர்கள் கொல்லப்படுவதாக தெரியவந்துள்ளது.
Powered by Blogger.