விக்னேஷ் சிவனை மாற்ற முடிவு செய்த நயன்தாரா!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா காதலிப்பது உலகமே அறிந்ததே. இந்த நிலையில் காதலர் விக்னேஷ் சிவனை ஒரு சூப்பர் ஹிரோவாக மாற்ற நயன்தாரா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.சமீபத்தில் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன், திடீரென அந்த படத்தில் இருந்து விலக்கப்பட்டு அவருக்கு பதிலாக எம்.ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நயன்தாரா, இனி தனது காதலருக்கு யாரும் வாய்ப்பு தர வேண்டாம், தான் தயாரிக்கும் படங்களையே அவர் இயக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம். அதுமட்டுமின்றி தனது காதலரை இனிமேல் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் மாற்ற முடிவு செய்துள்ளாராம்.
அஜித், விஜய் போன்ற விக்னேஷ் சிவனையும் ஒரு பெரிய ஹீரோவாக்கி காட்டுவேன் என்று சபதம் செய்துள்ள நயன், விரைவில் விக்னேஷ் சிவன் இயக்கி நடிக்கும் படம் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளாராம். இந்த படத்தில் அவர்தான் நாயகி என்பதை சொல்லவும் வேண்டுமா?
Powered by Blogger.