மண்ணெண்ணெய் கலப்படத்திற்கு கடுமையான நடவடிக்கை!

"மானியமாக வழங்கப்படும் மண்ணெண்ணெய்யை சிலர் கலப்படம் செய்ய இடமளிக்கமாட்டோம். ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் மண்ணெண்ணெய் கலப்படம் மேற்கொள்ளும் எரிபொருள் நிலையங்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் "மண்ணெண்ணெய் கலப்படத்தை நிறுத்தும் நோக்கில் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்துள்ளோம்.

நாடு மற்றும் அரசு என்ற ரீதியிலேயே நட்டத்தின் மத்தியில் நாங்கள் மண்ணெண்ணெய்யை விநியோகிக்கின்றோம். நாங்கள் நடத்திய ஆய்வில் சில எரிபொருள் நிலையங்களில் டீசல் மற்றும் பெற்றோலில் மண்ணெண்ணைய் கலப்படம் செய்யப்படுகின்றது. வழிநடுவில் பவுசர்களில் மண்ணெண்ணைய் கலப்படம் இடம்பெருகின்றது.

எங்களது சிறப்பு குழவினால் மண்ணெண்ணெய் கலப்படத்திற்கு காரணமான பலரை கண்டுபித்துள்ளளோம். ஆனால் சட்டத்தில் உள்ள சில குறைபாடுகள் காரணமாகவே சில சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை.

எதிர்காலத்தில் கடுமையான தீமானத்தை மேற்கொள்ளவேண்டிய நிலையுள்ளது. ஆகவே நாங்கள் மண்ணெண்ணெய் கலப்படத்தை நிறுத்த எல்லா முயற்சிகளை மேற்கொள்கின்றோம். காரணம் மண்ணெண்ணெய் பாவனை குறையவேண்டிய காலத்தில்தான் அதன் நூகர்வு அதிகரித்துள்ளது." என  அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.