தொடரூந்து கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் குழு!

தொடரூந்து கட்டணம் நூற்றுக்கு 15 வீதத்தால் அதிகரிப்பது தொடர்பில் அறிக்கை மற்றும் யோசனையை முன்வைக்க 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 தொடருந்து முகாமையாளர் எஸ்.எம். அபேவிக்கரமவினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 அந்த குழுவின் தலைவராக, தொடரூந்து மேலதிக முகாமையாளர், விஜய சமரசிங்ஹ நியமிக்கப்பட்டுள்ளார்.

 2008 ஆம் ஆண்டின் பின்னர் தொடருந்து கட்டணம் அதிகரிக்கப்படாத நிலையில், அதனை தற்போது அதிகாரிக்க நடவடிக்கை எடுப்பதாக, தொடருந்து முகாமையாளர் எஸ்.எம். அபேவிக்கரம எமது செய்தி பிரிவிடம் குறிப்பிட்டிருந்தார்.

 அதற்கமைய எதிர்வரும் புதுவருடப்பிறப்பை அடுத்து தொடரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Powered by Blogger.