எனது சினிமா வாழ்க்கையில் இது ஒரு சிறந்த படம் – தமன்னா!

சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் நடித்து முடித்திருக்கும் தமன்னா இந்த படம் தனது சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான சிறந்த படமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
#Tamannaah
உணர்வுகளை சமுதாய பொறுப்போடு அழகாக இணைத்து தருவதில் இயக்குநர் சீனு ராமசாமியும் ஒருவர். இவரது ஒவ்வொரு படங்களும் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும் படியாக இருக்கும். அந்தவகையில் அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான தர்மதுரை படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. 
இந்நிலையில், அவரது இயக்கத்தில் அடுத்த படமாக `கண்ணே கலைமானே’ படம் உருவாகி இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. 
சீனு ராமசாமி, யுவன் ஷங்கர் ராஜா, கவி பேரரசு வைரமுத்து ஆகியோரின் கூட்டணியில் படத்தின் பாடல்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. 
இது குறித்து தமன்னா பேசுகையில், 
” நிறைய பேசாமலேயே நடிகர்களுக்கு அவர்களது கதாபாத்திரத்தையும், தனக்கு என்ன வேண்டும் என்பதையும் மிக சிறப்பாக விளக்கி, வேலை வாங்குபவர் இயக்குனர் சீனு ராமசாமி. `தர்மதுரை’ படத்திற்கு பிறகு அவருடன் சேர்ந்து மீண்டும் பணிபுரிய வேண்டும் என ஆவலோடு இருந்தேன். எனது சினிமா வாழ்க்கையின் சிறந்த படங்களில் `கண்ணே கலைமானே’ நிச்சயம் ஒன்றாகும். இந்த படத்தில்  உதயநிதி அவர்களின் கதாபாத்திரத்தையும், நடிப்பையும் தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள். அவ்வளவு சிறப்பாக அவர் நடித்துள்ளார். `கண்ணே கலைமானே’ படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் ”. 
#Tamannaah, #KanneKalaimane

Powered by Blogger.