ஜேம்ஸ் பாண்டு நடிகரை ஏமாற்றிய இந்திய நிறுவனம்..!

முன்னால் ஜேம்ஸ் பாண்டு 077 நட்சத்திரமான பியர்ஸ் ப்ராஸ்னன் வாய் துர்நாற்றம் போக்கும் பொருட்களை விற்பதாக ஒரு இந்திய நிறுவனம் தன்னை ஏமாற்றி விளம்பரத்தில் நடிக்க வைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பியர்ஸ் ப்ராஸ்னன் முதன் முறையாக டிவி விளம்பரங்களில், நாளிதழ்களில் மற்றும் பில்போர்டுகளில் 2016-ம் ஆண்டுப் பான் பஹார் என்ற விளம்பரத்தில் நடித்து இருந்தார். இந்தப் பான் மசாலாவை பயன்படுத்திப் பலருக்கு வாய் புற்றுநோய் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

ஜேம்ஸ் பாண்டு டிவி விளம்பரத்தில், சமுக வலை தளங்களில் ஒரு வில்லன் தோற்றத்தில் டிரெண்டும் ஆகி இருந்தான. டெல்லியில் இருந்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் இருந்து அவருக்கு விளக்கம் அளிக்கக் கோரி நோட்டிஸூம் அனுப்பியது.
தெரியாமல் மாட்டி கொண்டேன்


தெரியாமல் மாட்டி கொண்டேன்

சுகாதாரத் துறைக்கு அளித்த பதிலில் தான் தெரியாமல் ஏமாற்றப்பட்டு அந்த விளம்பரத்தில் நடிக்க வைக்கப்பட்டாதாகவும், தான் உடல் நலத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எந்த விளம்பரத்திலும் நடிக்க விரும்புவதில்லை என்று பியர்ஸ் ப்ராஸ்னன் தெரிவித்ததாகவும் சுகாதாரத் துறை அதிகாரி எஸ் கே அரோரா தெரிவித்தார்.

பான் பஹார்

பான் பஹார்

பான் பஹார் நிறுவனம் தங்களது தயாரிப்பில் நிக்கோட்டின் போன்றவை இல்லை என்று கூறியதாகவும், ஆனால் இந்தியாவில் பிற பான் மசாலாக்கலில் புகையிலை பொருட்கள் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உறுதி

உறுதி

பியர்ஸ் ப்ராஸ்னன் இந்திய சுகாதார அதிகாரிகளுக்கு இனி தான் இந்த மாதிரியான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் இன்று உறுதி அளித்து இருப்பதாகவும் எனவே அவரது பதில் குறித்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அரோரா தெரிவித்தார்.
Powered by Blogger.