அன்னை பூபதிக்கு நோர்வே ஒஸ்லோவில் உருவச் சிலை!

தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் மிகப்பெரும் வகி பாத்திரத்துக்கு,வரலாற்று நிகழ்வுக்கு ஒரு பெரும் அடையாளம் அன்னை பூபதி.
அன்னை பூபதிக்கு நோர்வே ஒஸ்லோவில் அமைந்திருக்கும் அன்னை பூபதி கல்வி வளாகத்தினுள் உருவச் சிலை திறந்துவைக்கப்பட இருக்கிறது.
அன்னை பூபதியின் சிலையும் அதன் கீழே இருக்கும் பீடத்தில் ‘ வரலாறு தெரிந்த இனமே வரலாறு படைக்கிறது என்ற வாசகமும் கொண்ட இந்த சிலை 24.03.2018 சனிக்கிழமை மாலை 2மணியளவில் ஒஸ்லோ அன்னை பூபதி தமிழ்கலைக் கூடத்தினுள் திறந்து வைக்கப்பட இருக்கிறது.
மகத்தான உறுதிமிக்க தலைமையினால் முன்னெடுக்கப்பட்டு பல்லாயிரம் மாவீரர்களின் தியாகத்தால்
விரிந்தெழுந்த ஒரு பெரும் விடுதலைப் போராட்டம் வெறுமனே நிலத்தை மீட்பது மட்டும் இல்லாமல் அந்த மக்களின் சமூக வாழ்வியல் பண்பாடு சிந்தனை உலகை எதிர்கொள்ளும் தர்க்கரீதியான புதிய பார்வை என்று பல தளங்களிலும் பலநூற்றாண்டு மாற்றத்தை ஓரிரு வருடங்களில் நிகழ்த்தி விடுகிறது.
அப்படியான ஒரு மாற்றம் புலம்பெயர் தேசங்களில் தமிழ்மொழி தமிழர்களின் கலை பற்றிய கல்வி சம்பந்தமாகவும் ஏற்பட்டது. இந்த மாற்றத்தின் ஒரே காரணி அங்கு நடந்த விடுதலைப்போராட்டமே அன்றி புலம்பெயர் தேசங்களில் இருந்த தனிநபர்கள் அல்ல.
விடுதலைப் போராட்டத்தின் தியாகங்களும் தலைமையின் நேர்த்தியான உறுதியான வழிகாட்டலும் அதனூடு எழுந்த பெரும் மக்கள் எழுச்சியுமே அனைத்து மாற்றங்களின் மூலம்.
அந்த மாற்றத்தின் ஒரு வெளிப்பாடாக 1992ல் நோர்வேயில் உருவான அன்னை பூபதி தமிழ்கலைக் கூடம் இப்போது அன்னை பூபதியின் சிலைத் திறப்பின் ஊடாக மீண்டும் ஒரு செய்தியை அனைவருக்கும் சொல்லி நிற்கிறது. வரலாறு என்பது பெரும் நதிபோன்றது அதன் இயங்குசக்தி தியாகமும் அர்ப்பணமும் செயற்பாடுமே.
Powered by Blogger.