காத்திருப்பேன் கடனாளியாய்....!
விட்டு விலகிடு என நீ சட்டம்
போட்ட பின்னரும் உன்னில்
ஒட்டிக்கொள்ளாமல் உனக்காக வாழும்
அன்பில் பசுமை மாறாத கடனாளி நான்.
முட்டி மோதும் உன் கருத்தால் கலங்கி
எட்டி நின்று ஏக்கத்தோடு உன்னை
கட்டித்தழுவும் காதல் இதயம் எனது.
ஏமாற்றங்கள் புதியவை அல்ல நீ
எறிந்த சொற் கணைகள் மனதை
துளைத்தொரு நாட்டியமாடுதே தினமும்.
எத்தனை அழகு உன்
சித்திரச் சிரிப்பு.
பற்றி எரியுதே நீ தந்த
வலிகளின் வதைப்பு.
சொட்டும் குறையாத என்
அன்பினை எறிந்து
பெற்று விட்டாயா பெரும் நிம்மதி தன்னை?
ஆவியும் அனலாகி கொதிக்குது தவித்து
அனலிடைப் புளுவாகி போனதே மனது.
தொட்டுவிடாத தூரம் என்று
நிலவை ரசிக்க
கட்டுப்பாடுகளை யார் போட முடியும்?
நீ நிலவாயின் உன்
ஒளியமுதை ஏந்தி
பருகும் சிறு பறவை நானாவேன்.
நீ மலராயின் உன் மெல்லிதழில்
துயிலும் மலர்த்தேனி நானல்லவோ?
உன் கண் மலர்கள் மீள் மலர்ந்து
களிப்பூட்ட மாட்டாதா? அந்த
கண்மலர் தேன் மதுவில்
நான் மயங்கிட மாட்டேனா?
அந்தப் பொற்காலம் மீண்டும்
பூக்கும் பூக்குமே நீ
பேரன்பில் எனைத் தழுவும்
நாளும் உருவாகுமே.
அதுவரைஉன்னை
ஒளிந்தொரு ஓரமாய் ராசித்து
அன்பில் கடனாளியாய் காத்திருப்பேன்.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
போட்ட பின்னரும் உன்னில்
ஒட்டிக்கொள்ளாமல் உனக்காக வாழும்
அன்பில் பசுமை மாறாத கடனாளி நான்.
முட்டி மோதும் உன் கருத்தால் கலங்கி
எட்டி நின்று ஏக்கத்தோடு உன்னை
கட்டித்தழுவும் காதல் இதயம் எனது.
ஏமாற்றங்கள் புதியவை அல்ல நீ
எறிந்த சொற் கணைகள் மனதை
துளைத்தொரு நாட்டியமாடுதே தினமும்.
எத்தனை அழகு உன்
சித்திரச் சிரிப்பு.
பற்றி எரியுதே நீ தந்த
வலிகளின் வதைப்பு.
சொட்டும் குறையாத என்
அன்பினை எறிந்து
பெற்று விட்டாயா பெரும் நிம்மதி தன்னை?
ஆவியும் அனலாகி கொதிக்குது தவித்து
அனலிடைப் புளுவாகி போனதே மனது.
தொட்டுவிடாத தூரம் என்று
நிலவை ரசிக்க
கட்டுப்பாடுகளை யார் போட முடியும்?
நீ நிலவாயின் உன்
ஒளியமுதை ஏந்தி
பருகும் சிறு பறவை நானாவேன்.
நீ மலராயின் உன் மெல்லிதழில்
துயிலும் மலர்த்தேனி நானல்லவோ?
உன் கண் மலர்கள் மீள் மலர்ந்து
களிப்பூட்ட மாட்டாதா? அந்த
கண்மலர் தேன் மதுவில்
நான் மயங்கிட மாட்டேனா?
அந்தப் பொற்காலம் மீண்டும்
பூக்கும் பூக்குமே நீ
பேரன்பில் எனைத் தழுவும்
நாளும் உருவாகுமே.
அதுவரைஉன்னை
ஒளிந்தொரு ஓரமாய் ராசித்து
அன்பில் கடனாளியாய் காத்திருப்பேன்.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
கருத்துகள் இல்லை