தமிழில் உருவாகும் ஜோம்பி பிளஸ் அடல்ட் காமெடி ஜானர்!

‘பல்லு படாம பாத்துக்க ’அப்டீங்கற பேர்ல ஒரு படம் தயாராகிகிட்டு இருக்கு. டைட்டில் டபுள் மீனிங்ல இருக்குன்னு எல்லாரும் பேசிக்கிறதால டைரக்டர் விஜய் வரதராஜ், புத்திசாலித்தனமாக யோசிச்சு ஒரு விசயத்தை சொல்லியிருக்காரு.

அது என்னான்னா இந்த படம் அடல்ட் காமெடி படமா இருந்தாலும் ஜோம்பி என்கிற மனுசங்கள திங்கற கூட்டத்த பத்தின படம். தமிழ்ல இந்த ஜானர்ல ஏற்கனவே ஜெயம் ரவி லட்சுமி மேனன் நடிச்ச மிருதன்னு ஒரேயொரு படம் தான் வந்துருக்கு. அந்த படத்த போல இந்த படமும் இருக்கும். ஆனா கொஞ்சம் அடல்ட் காமெடி அதிகமாக இருக்கும். அவ்வளவு தான். இன்னைக்கி யூத்துக்கு ஜாலியாக கத சொல்ற படம் தான் பிடிச்சிருக்கு. அதனால் இந்த டைட்டில்ல படம் எடுத்துக்கிட்டு இருக்கோம்.


திடீர்னு சூட்டிங் போகக்கூடாதுன்னு கேப்டன் விஷால் சொல்லிட்டதால இப்போ சூட்டிங்கு போகல. ஆனா பாதி படத்த முடிச்சிட்டோம். 


இதுல அட்டக்கத்தி தினேசும், நடிகை சஞ்சிதா ஷெட்டியும் ஜோடிப் போட்டு நடிக்குறாங்க. அப்புறம் ஜெகன், சேதுபதி லிங்கா, எங்க யூட்யூப் சேனல்ல நடிச்சிட்டு இருக்குற ஷா ரா,  ரிஷி, அப்துல்னு மூணு பேரும் நடிக்குறாங்க.


படத்துக்கு பாலமுரளி பாலு என்பவர் இசையமைக்கிறாரு. இவர் ஏற்கனவே அடல் காமெடி படமா வெளியாகி பெரிய ஹிட்டடிச்ச ஹாஹாமஹாதேவகி படத்தோட மியூசிக் டைரக்டர். இவர் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து அப்டீங்கற படத்துக்கு மியூசிக் பண்றாரு. நல்ல பண்றதால இந்த படத்துக்கும் அவரேயே போட்ருக்கோம்.’ என்றார் இயக்குநர் விஜய் வரதராஜ்.
Powered by Blogger.