சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் மருத்துவமனையில் தவிக்கும் பிரபல நடிகை

நடிகர் சல்மான்கானுடன் கதாநாயகியாக நடித்த பாலிவுட் நடிகை பூஜா தட்வால், காசநோயால் பாதிக்கப்பட்டு ஆதரவின்றி மருத்துவமனையில் அவதிப்பட்டு வருகிறார்.
மேலும் அவர் சாப்பிட கூட பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
 வீர்காடி, ஹிந்துஸ்தான், சிந்தூர் கி சவுகந்த் போன்ற ஹிந்தி படங்களில் நடித்துள்ளார் பூஜா தட்வால் .பின் சினிமாவிலிருந்து விலகிய அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். ஆனால், தற்போது அவர் மிகவும் வறுமையில் வாடி வருவதும், காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
                           
மேலும் அவரது உடல்நிலை  மோசமாக இருப்பதை தெரிந்து கொண்ட பூஜா கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரை  மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
இந்நிலையில்  பூஜா சாப்பிடக்கூட பணம் இல்லாமல் ஆதரவின்றி, அனாதையாக தவித்து வருகிறார் .மேலும் மருத்துவமனையில்  உள்ள சிலர் தற்போது அவருக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.எனவும் கூறப்படுகிறது.
                                                     
சல்மான் கான் உடன் ஜோடியாக நடித்த பூஜா  தனக்கு உதவி செய்யுமாறு நடிகர் சல்மான் கானிடம் ஒரு வீடியோ மூலம் உதவி கேட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக சல்மான் கான் தனக்கு உதவி செய்வார் என்று நம்பிக்கையாக கூறிவருகிறார்.
Powered by Blogger.