யாழில் வெள்ளரிப்பழம் அமோக விற்பனை!

யாழ் குடாநாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக வெள்ளரிப்பழம் அதிகளவு விற்பனை அதிகரித்து வருகின்றது. 
குடாநாட்டில் மட்டும் 250 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் வெள்ளாரிப்பழச் செய்கையினை ஊடுபயிராக மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். சங்குவேலி, மானிப்பாய் அச்சுவேலி, கோப்பாய், பண்டத்தரிப்பு, மாதகல், சுன்னாகம், மல்லாகம்,மருதனார்மடம்,திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் வெள்ளரிப்பழச் செய்கையை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளரிப்பழங்களின் அளவுக்கேற்ப பெரிய வெள்ளரிப்பழமொன்று 250 ரூபாவாகவும், சிறிய வெள்ளரிப்பழமொன்று 100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
Powered by Blogger.