கொழும்பில் சீன அரச வங்கியின் முதலாவது கிளை ஆரம்பம்!

சீன அரச வங்கி தனது முதலாவது கிளை இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று மாலை ஆரம்பித்தது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு சீன வங்கியின் கொழும்பு கிளையை திறந்து வைத்தார்.
இரண்டு நாடுகளின் உறவுகளை நோக்குமிடத்து இலங்கையின் பொருளாதார கட்டமைப்பின் ஒரு முன்னேற்றகரமாக படிக்கல்லாக இது அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன வரலாற்றில் சீனாவுடனான பொருளாதார உறவுகள் இலங்கையில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஒரு பெரு நகரமாக மாற்றமடைந்து கொண்டு வரும் தருணத்தில் சீனாவின் அரச வங்கி தனது கிளையை இங்கு ஸ்தாபித்துள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களாக சீனாவின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான வெற்றிக்கு ஒரு சான்றாகவும், உலகளாவிய நான்காவது பெரிய வங்கியாகவும் விளங்கியது,
அது உலகின் முன்னணி வங்கியாக உருவெடுக்கும் காலம் வெகு தூரம் இல்லை.
இந்தநிலையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக சீனா கடந்த காலங்களில் பாரியளவில் கடன் தொகைகளை வழங்கியிருந்தது.
இதன்காரணமாக இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகள் இலங்கையை சந்தேக கண் கொண்டே பார்க்கின்றன என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.