மன அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்கள் கலை மீது ஆர்வம் செலுத்த வேண்டும்!

மன அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்கள் கலை மீது ஆர்வம் செலுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து
வலியுறுத்தியுள்ளார்.சென்னை தாம்பரத்தில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர்,கல்வியில் உலகஅளவில் போட்டியிடும் வகையில் தமிழக மாணவர்கள் திறமையை வளர்த்து கொள்ளவேண்டும் என்று கூறினார். இளைஞர் பருவம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்ட வைரமுத்து, இதனை புரிந்து கொண்டு லட்சிய பாதையில் மாணவர்கள் செல்லவேண்டும் என்றும் தெரிவித்தார். மன அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்க கலை மீது மாணவர்கள் ஆர்வம் செலுத்தவேண்டும் என்றும் வைரமுத்து குறிப்பிட்டார்.
Powered by Blogger.