விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் சாவடைந்தார்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாளர் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் (29.03.2018) அதிகாலை சுவிஸ் நாட்டில் சாவடைந்தார். 
இவர் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தொழில்நுட்ப வல்லுநரான இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனத்தின் தொழில்நுட்பப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தார். 
1983 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பல வரலாற்றுப் பதிவுகளின் சாட்சியங்கள் இவரால் பதிவு செய்யப்பட்டன. இறுதிக்காலம் வரை இவர் பணியாற்றினார். 
சுவிஸ் - ஜெனிவா மனித உரிமை அமர்வில், தமிழினத்திற்கு சிங்கள அரசால் இளைக்கப்பட்ட அநீதியை வாக்குமூலமாக வெளிப்படுத்தியவர். சிங்களப் படைகளில் அட்டூழியங்களின் சாட்சிகளில் ஒருவராக அவர் தன்னை வெளிப்படுத்தினார். 
தற்போதைய காலத்தில் இவரது இழப்பு தமிழினத்திற்கு பேரிழப்பாகும். 
Powered by Blogger.