கூட்டமைப்பு தமது இனத்தின் அபிலாசைகளை அறிந்து செயற்பட வேண்டும்!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது இனத்தின் அபிலாசைகளை அறிந்து செயற்பட  வேண்டும். பிரதமரின் நிர்வாகத்தின் கீழ் வடகிழக்கில் கடந்த மூன்று வருடகாலமாக நிலையான அபிவிருத்திகள் ஏதும் செயற்படுத்தப்படவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பிணர் பந்துல குணவர்தன


நாட்டை பிரித்து இனங்களுக்கிடையில் மீண்டும் விரோதங்களை ஏற்படுத்தும் அரசியலமைப்பினை உருவாக்கும் விடயத்திற்கு மாத்திரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியத்துவம் கொடுக்காமல் தமது இனமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் கவனம் செலுத்துவதே அம்மக்களுக்கான அரசியல் தீர்வாக காணப்படும் என தெரிவித்தார்.
ஸ்ரீவஜிராஸ்ரம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Powered by Blogger.