‘யாழ்’ திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வெற்றி களிப்பை பெற்றுள்ளது!

ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் ‘யாழ்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான கட்டணங்களை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 1-ந்தேதி முதல் படதயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
ஆந்திராவிலும் இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது.இதன் காரணமாக புதிய படங்களை திரையிடக் கூடாது என்று தயாரிப்பாளர்களுக்கு, தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.
இதன் காரணமாக பல புதிய படங்கள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், ‘யாழ்’ என்ற திரைப்படம் புதுப்பொலிவுடன் வெளியாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் டானியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக நீலிமா, லீமா, மிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.
குழந்தை நட்சத்திரமாக ரக்‌ஷனா மற்றும் ஈழத்து கலைஞர்கள் நடித்திருக்கின்றனர்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கி இருக்கிறார் எம்.எஸ்.ஆனந்த்.
ஈழத்தமிழர்களை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் கதை, ஆரம்பம் முதல் இறுதிவரை இலங்கையில் நடக்கிறது. வசனம் முழுவதும் இலங்கை தமிழிலே அமைத்திருக்கிறார்கள்.
‘யாழ்’ என்பது ஈழத்தமிழர்கள் பயன்படுத்திய ஒரு இசைக்கருவி. பாணர்கள் தமிழர்களின் கலை, கலாசாரத்தை, பண்பாட்டை ஊர் ஊராக சென்று பரப்பியதால் தான் யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்தது.
யாழ்ப்பாண கலாசார கதாபாத்திரங்களுக்கு இடையில் இறுதிப்போரின் போது அவர்களுக்குள் நடந்த நட்பு, காதல் போன்ற சம்பவங்களை மிக ஜனரஞ்சகமாக எடுத்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.