வவுனியா முகத்தான் குள விநாயகர் ஆலயத்தில் நாகபாம்பு வழிபாடு!

வவுனியா செட்டிக்குளத்திலுள்ள விநாயக ஆலயத்தில் அதிசயம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
செட்டிகுளம் முகத்தான் குளம் பகுதியிலுள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்த கும்பாபிஷேக நிகழ்வு இன்று நடைபெறுகிறது.
இன்றைய பூஜையின் போது ஆலயத்தில் வைக்கப்பட்ட நாகபூஷணி அம்மனுக்கு தீப ஆராதனை செய்யும் போது திடீரென அங்கு நாகபாம்பு ஒன்று தோன்றியுள்ளது.அம்மனின் திருவுருத்தில் ஏறிய நாக பாம்பு பக்தர்களுக்கு காட்சி கொடுத்துள்ளது. தீப ஆராதனை முடியும் வரையில் அங்கேயே இருந்துள்ளது. ஆராதனை முடிந்தவுடன் அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளது.
இந்த அதிசய சம்பவத்தை காண பெருந்தொகை பக்தர்கள் ஆலயத்தில் திரண்டிருந்தனர்.

Powered by Blogger.